/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காலை உணவு திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
/
காலை உணவு திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 27, 2025 01:21 AM
ராசிபுரம், முதல்வர் ஸ்டாலின், சென்னையில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, ராசிபுரம் நகராட்சி துாய இருதயம் உதவிபெறும் தொடக்கப்பள்ளியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன் கவிதா முன்னிலை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன், காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து சாப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''முதல்வரின் காலை உணவு திட்டம், அரசு நிதி உதவிபெறும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள, 29 பள்ளிகளில், 2,531 மாணவ, மாணவியளர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 914 பள்ளிகளில், 39,435 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது,'' என்றார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, சி.இ.ஓ., மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.