/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அமைச்சர் வீடு முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு
/
அமைச்சர் வீடு முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு
ADDED : மே 27, 2025 01:41 AM
நாமக்கல், அருந்ததியர் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி, ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில், கோரிக்கை மனு அளித்ததுடன், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்த ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தினர், '
நாமக்கல்லில் உள்ள தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வீட்டை நேற்று, காலை, 10:30 மணிக்கு முற்றுகை இட்டு போராட்டம் நடத்துவதாக' அறிவித்திருந்தனர். இதையடுத்து, நாமக்கல் போலீஸ் எஸ்.ஐ., சாந்தகுமார் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், வீட்டில் இருந்த அமைச்சர் மதிவேந்தன், சென்னை புறப்பட்டு சென்றுவிட்டார்.இதையறிந்த ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தினர், அமைச்சர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை ஒத்தி வைத்ததாக அறிவித்தனர். தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திரும்பி சென்றனர்.