/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கைவினை கலைஞர்களுக்கு கடன் சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்
/
கைவினை கலைஞர்களுக்கு கடன் சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்
கைவினை கலைஞர்களுக்கு கடன் சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்
கைவினை கலைஞர்களுக்கு கடன் சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 26, 2025 05:31 AM
நாமக்கல்: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழ-கத்தின் மூலம், 'விராசத்' என்ற பெயரில் கைவினை கலைஞர் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தையல் தொழில், பாய் முடைதல், கூடை பின்னுதல், தறி நெய்தல், ஆரி ஒர்க், எம்ப்ராய்டரி, மரச்சாமான்கள் செய்தல் மற்றும் இதர கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழில்-களில் ஈடுபடும் சிறுபான்மையினரை ஊக்குவிக்க இக்கடன் வழங்கப்படுகிறது. திட்டம், 1ன் கீழ் நகர்ப்புறம் மற்றும் கிராமப்-புறங்களில் வசிக்கும் ஆண்டு வருமானம் ரூபாய், 3 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்கு ஆண்களுக்கு, 5 சதவீதம், பெண்க-ளுக்கு, 4 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டம், 2ன் கீழ் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்குள் உள்ள-வர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்கு ஆண்களுக்கு, 6 சதவீதம், பெண்களுக்கு, 5 சதவீதம் வட்டி வசூ-லிக்கப்படும். கடனை, 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும். கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் வகுப்பை சேர்ந்தவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
விருப்பமுள்ளவர்கள் https://tamco.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகியோ விண்ணப்பங்களை பெறலாம். இத்தகவலை கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்-துள்ளார்.

