/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.90 கோடியில் நவீன பால் பதப்படுத்தும் ஆலை: எம்.பி., ராஜேஸ்குமார் பெருமிதம்
/
ரூ.90 கோடியில் நவீன பால் பதப்படுத்தும் ஆலை: எம்.பி., ராஜேஸ்குமார் பெருமிதம்
ரூ.90 கோடியில் நவீன பால் பதப்படுத்தும் ஆலை: எம்.பி., ராஜேஸ்குமார் பெருமிதம்
ரூ.90 கோடியில் நவீன பால் பதப்படுத்தும் ஆலை: எம்.பி., ராஜேஸ்குமார் பெருமிதம்
ADDED : மார் 27, 2024 04:47 PM
நாமக்கல்: ''நாமக்கல்லில், 90 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் நவீன பால் பதப்படுத்தும் ஆலையால், 12,500 விவசாயிகள் கூடுதல் போனஸ் பெறுவார்கள்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.
மோகனுார் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., லோக்சபா தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம், நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் நவலடி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:தி.மு.க., தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், பயிர்கடன், 500 கோடி ரூபாய் தள்ளுபடி, பால் விலையை லிட்டருக்கு, மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. தரமான அரிசி, சர்க்கரை, பருப்பு ரேஷனில் வழங்குகிறோம். மாவட்டத்தில், 16,000 பேர் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் பெறுகின்றனர்.
மோகனுாருக்கு, 25 கோடி ரூபாய் மதிப்பில், தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தபட்டுள்ளது. சுற்றி உள்ள கிராமங்களில், குடிநீர் கிடைக்க ஒருங்கிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டு, 400 கோடி ரூபாயில், புதிய குடிநீர் திட்டம் வழங்கப்பட உள்ளது.
அதேபோல், 12,500 விவசாயிகள் பயன்பெறும் வகையில், 90 கோடி ரூபாயில், நாமக்கல் - மோகனுார் சாலையில், அதிநவீன பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்பட உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் போனஸ் கிடைக்கும். அ.தி.மு.க.,வின், 10 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தனர். இவ்வாறு அவர் பேசினார்.
பேரூர் செயலாளர் செல்லவேல், டவுன் பஞ்., தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார், முன்னாள் டவுன் பஞ்., தலைவர் உடையவர், விவசாய அணி துணை அமைப்பாளர் வரதராஜன், கொ.ம.தே.க., மாவட்ட துணைதலைவர் ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

