/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியதால் பரபரப்பு
/
தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியதால் பரபரப்பு
தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியதால் பரபரப்பு
தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியதால் பரபரப்பு
ADDED : அக் 06, 2024 03:25 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்துள்ள குமாரமங்கலத்தில், ஆள் இல்-லாத தோட்டத்தில் மர்ம நபர்கள் புகுந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் அருகே, மண்டகபா-ளையம் கிராமத்திற்கு உட்பட்ட பள்ளிகாடு என்ற பகுதியில், செங்கோட்டையன் லட்சுமி தம்பதிகள் மூன்று ஏக்கர் தோட்-டத்தில் மா, கொய்யா, தேக்கு உள்ளிட்ட மரங்களை வளர்த்து வந்தனர். சென்னையில் வசித்து வரும் அவர்கள், இரண்டு மாதங்-களுக்கு ஒரு முறை திருச்செங்கோடு வந்து தோட்டத்தில் உள்ள மரங்களை பராமரித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.இந்நிலையில், செங்கோட்டையன் தோட்டத்தில் வைத்து பரா-மரிக்கபட்டு வந்த பலா, கொய்யா, தென்னை, மகாகனி போன்ற உயர்ரக விலை உயர்ந்த மரங்களை மர்ம நபர்கள் சிலர் நேற்று அதிகாலை நேரத்தில் வெட்டியதோடு, தோட்டத்திற்கு பாதுகாப்-பிற்காக சுற்றி அமைத்து இருந்த கம்பி வேலியையும் பிடுங்கி உள்ளனர். அக்கம் பக்கத்தினர் சென்னையில் உள்ள செங்கோட்-டையனுக்கு தகவல் தந்துள்ளனர்.
இதையடுத்து, சென்னையில் இருந்து வந்த செங்கோட்டையன், திருச்செங்கோடு ரூரல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.