/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மர்ம நபர்கள் நடமாட்டம்; தப்பி ஓடியவர்களுக்கு வலை
/
மர்ம நபர்கள் நடமாட்டம்; தப்பி ஓடியவர்களுக்கு வலை
ADDED : செப் 14, 2024 07:11 AM
பள்ளிப்பாளையம்: வெப்படை அடுத்த காமராஜ் நகரில், நேற்று நள்ளிரவு, குடியிருப்பு பகுதியில் திருட்டில் ஈடுபட்டு தப்பியோடி மர்ம நபர்களை, போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில், வீடு கட்டும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கட்டுமான பணி நடக்கும் இடத்திலேயே தங்கிக்கொள்கின்றனர். நேற்று நள்ளிரவு, டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத, 2 பேர், வடமாநில தொழிலாளர்களின் மொபைல் போனை திருடியுள்ளனர்.
அங்கிருந்து டூவீலரில் தப்பிச்செல்லும்போது, அப்பகுதியை சேர்ந்த ஒருவர், நீங்கள் யார்? எதற்காக இரவு நேரத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள்? என, கேட்டுள்ளார். அதற்கு, 'நீ யார்?' என, எதிர்த்து பேசியுள்ளனர். அவர், உடனடியாக நண்பர்களுக்கு மொபைல் போனில் தெரிவித்துள்ளார். அதற்குள், மர்மநபர்கள் டூவீலரை அங்கேயே விட்டுவிட்டு தப்பினர். இவ்வாறு அவர்கள் கூறினர். மர்மநபர்கள் விட்டுச்சென்ற டூவீலரை வைத்து, வெப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.