/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பகுதி நேர ரேஷன் கடை எம்.பி., திறந்து வைப்பு
/
பகுதி நேர ரேஷன் கடை எம்.பி., திறந்து வைப்பு
ADDED : நவ 22, 2025 02:30 AM
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில், 7.80 லட்சம் ரூபாய் மதிப்பில், கல்கி மகளிர் சுய உதவிக்குழு புதிய பகுதி நேர ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா, நேற்று நடந்தது.
நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்தார்.தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு, நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.
கூட்டுறவுவாளர்கள் ராணா ஆனந்த், கணேசன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

