/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரயில்வே மேம்பாலம் அமைக்க எம்.பி., ராஜேஸ்குமார் கோரிக்கை
/
ரயில்வே மேம்பாலம் அமைக்க எம்.பி., ராஜேஸ்குமார் கோரிக்கை
ரயில்வே மேம்பாலம் அமைக்க எம்.பி., ராஜேஸ்குமார் கோரிக்கை
ரயில்வே மேம்பாலம் அமைக்க எம்.பி., ராஜேஸ்குமார் கோரிக்கை
ADDED : டிச 05, 2024 07:23 AM
நாமக்கல்: டில்லியில், மத்திய ரயில்வே வாரிய தலைவர் சதீஷ்குமாரை, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் சந்தித்தார்.
அப்போது, கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.அதில், நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, நாமக்கல் - சேலம் சாலையில் இருந்து, சேலம் -
-கரூர் தேசிய நெடுஞ்சாலை வரை, 194 கோடி ரூபாயில் புதிய பைபாஸ் சாலை அமைக்க, முதல்வர் ஸ்டாலின்
அனுமதி அளித்துள்ளார். 4 கட்-டங்களாக நடக்கும் இப்பணியில், முதல், 3 கட்டங்களுக்கு, திருச்சி மெயின்
ரோடு வரை, பைபாஸ் சாலை அமைக்கும் பணி விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது. இப்பணியின், 2வது
கட்டத்தில் வேட்டாம்பாடி அருகே, சேலம்- - கரூர் ரயில் பாதையை கடக்க, ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு
ரயில்வே துறையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த அனுமதியை விரைந்து வழங்கி, கட்டுமான பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே
மேம்பாலம் கட்டும் பணி முடிவடைந்தால், புதிய பைபாஸ் சாலை, பொதுமக்-களின் பயன்பாட்டுக்கு வரும் என,
தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, 'மேம்பால கட்டுமான பணிகளுக்கு விரைவில் அனுமதி வழங்க, துறைத்தலைவர் சம்மதம்
தெரிவித்ததாக' எம்.பி., ராஜேஸ்குமார் தெரிவித்தார்.