/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நவீன பட்டு அங்காடி அமைய உள்ள இடத்தை எம்.பி., ராஜேஸ்குமார் ஆய்வு
/
நவீன பட்டு அங்காடி அமைய உள்ள இடத்தை எம்.பி., ராஜேஸ்குமார் ஆய்வு
நவீன பட்டு அங்காடி அமைய உள்ள இடத்தை எம்.பி., ராஜேஸ்குமார் ஆய்வு
நவீன பட்டு அங்காடி அமைய உள்ள இடத்தை எம்.பி., ராஜேஸ்குமார் ஆய்வு
ADDED : ஜூன் 27, 2024 03:55 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில் நவீன பட்டு அங்காடி அமைய உள்ள இடத்தை, எம்.பி., ராஜேஸ்குமார் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது, பட்டு வளர்ச்சி மற்றும் கைவினை தொழில்துறை அமைச்சர் அன்பரசு, 'நாமக்கல் மாவட்டம், அணைக்கட்டிபாளையத்தில், 2.2 கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய பட்டுக்கூடு அங்காடி அமைக்கப்படும்' என, அறிவித்தார். இதையடுத்து, அணைக்கட்டிபாளையத்தில் பட்டுக்கூடு அங்காடி அமையவுள்ள இடத்தை, எம்.பி., ராஜேஸ்குமார் ஆய்வு செய்தார். அப்போது, இடம் தேர்வு, சாலை வசதி, எதிர்காலத்தில் தேவைப்படும் இடம் ஆகியவை குறித்து ஆலோசித்தார்.
தொடர்ந்து, அவர் கூறியதாவது:
நாமக்கல்லில் அனைத்து வசதிகளுடன் கூடிய, நவீன பட்டுக்கூடு அங்காடி அமைக்க அனுமதியளித்த தமிழக முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோருக்கு நன்றி. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'ஆட்சிக்கு வந்தவுடன் ராசிபுரத்தில் பட்டு மையம் அமைக்கப்படும்' என, அறிவித்திருந்தோம். அதை தற்போது நிறைவேற்றியுள்ளோம். மின்னணு ஏல முறையுடன் அதிநவீன வசதியுடன், 2.2 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பட்டு ஏல மையம் அமைக்கப்படவுள்ளது. இதனால் இப்பகுதி பட்டுக்கூடு விவசாயிகள் அதிக லாபம் பெற
முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், தாசில்தார் சரவணன், வி.ஏ.ஓ., அமுதா, சர்வேயர் பூங்குன்றன் உள்பட பலர் உடனிருந்தனர்.