/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முள்ளுக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
/
முள்ளுக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
ADDED : டிச 14, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, டிச. 14-
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், முள்ளுக்
குறிச்சியில் தமிழக அரசின் மின்வாரிய இயக்கமும் பராமரிப்பும் அலுவலகம், கரியாம்பட்டி சாலையில் இயங்கி வந்தது. ஆனால், நகர் பகுதியில் இருந்து நீண்ட துாரம் இருந்ததால், பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து மக்கள் வசதிக்காக முள்ளுக்குறிச்சி கோம்பை ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. அலுவலக இடமாற்ற விழாவில் முன்னாள்
எம்.எல்.ஏ., ராமசுவாமி, நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் ஆகியோர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை தொடங்கி வைத்தனர். மேலும், குத்துவிளக்கேற்றி கட்டண வசூலை தொடங்கி வைத்தனர்.

