ADDED : ஜூலை 27, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம் சட்டீஸ்கர் மாநிலம், சாகாமுன் மாவட்டம், ஜன்னுார், ஜெகதீஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் முன்ஷிராமபதாம் மகன் வினைபிரதான், 40; இவர் கடந்த, 2014 ஆக., 23ல் எலச்சிபாளையம் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி தங்கராசு என்பவரது ரிக் வண்டியில் பணிபுரிந்தபோது, உடன் பணிபுரிந்த சக ஊழியர் ஜல்தோஸ்வர் என்பவரை கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
பிரிவு, 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜன., 24ல் ஜாமினில் வெளியே வந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் அவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
அவரது சொந்த ஊரில் தலைமறைவாக இருந்த வினைபிரதானை, நேற்று முன்தினம் எலச்சிபாளையம் போலீசார் கைது செய்து, திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.