sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள், கன்று பலி

/

மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள், கன்று பலி

மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள், கன்று பலி

மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள், கன்று பலி


ADDED : அக் 02, 2024 07:19 AM

Google News

ADDED : அக் 02, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., வெள்ளக்கல்பட்டி அடுத்த பசிறு-மலை அடிவாரப்பகுதியை சேர்ந்தவர் செல்வம், 60. இவர், 10க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். இந்நி-லையில், நேற்று மதியம் மாட்டு கொட்டகையில் கால்நடைகளை கட்டிவைத்துவிட்டு சொந்த வேலையாக ராசிபுரம் சென்றார். நேற்று மாலை, திரும்பி வந்து பார்த்தபோது, கொட்டகையில் இருந்த, 6 ஆடுகள், கன்று குட்டி ஆகியவை மர்ம விலங்குகள் கடித்து இறந்து கிடந்தன.

நாய்கள் அல்லது பசிறு மலையில் இருந்து வந்த மர்ம விலங்கு கடித்து இறந்திருக்கலாம் என செல்வம் தெரிவித்தார். இறந்த ஆடுகள், கன்று குட்டிகளின் மொத்த மதிப்பு, ஒரு லட்சம் ரூபா-யாகும். இப்பகுதியில் நடக்கும் முதல் சம்பவம் இது என்பதால், இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், இப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் இறந்த கோழிகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக போட்டு விடுகின்றனர். இதை சாப்பிட இப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட நாய்கள் எப்போதும் சுற்றித்திரி-கின்றன. இறந்த கோழிகளை சாப்பிட வந்த நாய்கள், ஆடு, கன்றை கடித்து குதறியிருக்கலாம் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us