/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் மர்ம விலங்கு; டிராக் கேமரா பொருத்தி கண்காணிப்பு
/
கொல்லிமலையில் மர்ம விலங்கு; டிராக் கேமரா பொருத்தி கண்காணிப்பு
கொல்லிமலையில் மர்ம விலங்கு; டிராக் கேமரா பொருத்தி கண்காணிப்பு
கொல்லிமலையில் மர்ம விலங்கு; டிராக் கேமரா பொருத்தி கண்காணிப்பு
ADDED : டிச 31, 2024 07:43 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலையில் கால்நடைகளை கடித்து குதறி வரும் மர்ம விலங்கை பிடிக்க, 10 இடங்களில் டிராக் கேமரா பொருத்தி, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் குண்டூர்நாடு, இலக்கியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், சில நாட்களாக மர்ம விலங்கு கடித்து, 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. ஆடுகளை கடித்து குதறி வரும் மர்ம விலங்கு, சிறுத்தை புலி என, அப்பகுதி மக்கள், வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனால், மர்ம விலங்கு சிறுத்தை புலியா அல்லது காட்டு செந்நாய்களா என, கண்டறிய நத்துக்குழிப்பட்டி, இலக்கியம்பட்டி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட இடங்களில், நேற்று டிராக் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கொல்லிமலை வனத்துறையினர் கூறியதாவது:கால்நடைகளை சிறுத்தை புலி தான் கடிக்கிறது என, இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், சிறுத்தை புலி ஆடுகளை கடித்தால், ஒரு ஆட்டை மட்டும் கடித்து உணவை வைத்து சாப்பிடுவதற்காக இழுத்து சென்று விடும். ஆனால், ஒரே நேரத்தில், 3க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல், ஆடுகளை மொத்தமாக கடிப்பது செந்நாய்கள் தான். அந்த செந்நாய்கள் கொல்லிமலையில் இல்லை. எனவே, ஊர்புறங்களில் சுற்றி திரியும் நாய்கள் தான் ஒன்று சேர்ந்து ஆடுகளை கடித்திருக்கும். இதனை கண்டறிய, 10 டிராக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.