/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஸ்கூட்டரில் வந்து மொபட்டை திருடிச்சென்ற மர்ம நபர்கள்
/
ஸ்கூட்டரில் வந்து மொபட்டை திருடிச்சென்ற மர்ம நபர்கள்
ஸ்கூட்டரில் வந்து மொபட்டை திருடிச்சென்ற மர்ம நபர்கள்
ஸ்கூட்டரில் வந்து மொபட்டை திருடிச்சென்ற மர்ம நபர்கள்
ADDED : அக் 07, 2025 01:26 AM
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்தவர் பாபு, 52; டூவீலர் மெக்கானிக். இவர் அதே பகுதியில் பட்டறை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, பட்டறை முன், 'டி.வி.எஸ்., சேம்ப்' மொபட்டை நிறுத்தி வைத்திருந்தார். மொபட்டை திருடி செல்லாமல் இருக்க செயின் போட்டு பூட்டி சென்றிருந்தார். இந்நிலையி,ல் நேற்று முன்தினம் இவ்வழியாக வந்த மர்ம நபர்கள், சங்கிலியை அறுத்துவிட்டு பட்டறை முன்பிருந்த மொபட்டை, தாங்கள் வந்திருந்த ஸ்கூட்டரில் துாக்கி வைத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த பாபுவின் நண்பர்கள் சந்தேகத்தின் பேரில் வண்டியை துாக்கி சென்றவர்களை போட்டோ எடுத்துக்கொண்டனர். நேற்று, பாபு பட்டறைக்கு வந்த பிறகுதான் வண்டியை திருடி சென்றது தெரிந்தது. அதன் பிறகு நண்பர்கள் எடுத்த போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு திருடி சென்றவரை தேடி வருகின்றனர். இந்த வண்டியை பட்டறையில் விட்ட வேலுவும் தற்போது வண்டியை தேடி அலைந்து வருகிறார்.