/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுாரில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
/
ப.வேலுாரில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
ADDED : அக் 07, 2025 01:25 AM
ப.வேலுார், ப.வேலுார் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. பருவநிலை மாற்றத்தால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளதால், கொசு மருந்து அடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ப.வேலுார், வெட்டுக்காட்டுப்புதுார், காவிரி நகர், பழைய பைபாஸ் சாலையிலும் ப.வேலுார் டவுன் பஞ்., முழுதும் கொசு மருந்து அடிக்கும் பணியை, செயல் அலுவலர் சண்முகம் நேற்று துவக்கி வைத்தார். துப்புரவு அலுவலர் செல்வகுமார், துப்புரவு மேற்பார்வையாளர் தாமரைச்செல்வி தலைமையில் துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் மருந்து தெளித்தும், கொசு ஒழிப்பு மருந்து அடித்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடு, கடைகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றால் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும். அதனால் மழை நீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என, ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் சண்முகம்
அறிவுறுத்தினார்.