ADDED : அக் 07, 2025 01:25 AM
வெண்ணந்துார், வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதியில் அரளிப்பூ சீசனை முன்னிட்டு வரத்து அதிகரித்துள்ளதால் சேலம் நாமக்கல் போன்ற சந்தைகளில் விலை குறைந்து கிலோ ரூ.30க்கு
விற்கப்படுகிறது.
வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட அத்தனுார், மின்னக்கல், கோம்பைக்காடு, நெ.3 கொமாரபாளையம், தேங்கல்பாளையம், குட்டலாடம்பட்டி, ஆர்.புதுப்பாளையம், கல்லாங்குளம் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அரளிப்பூ நாற்று உற்பத்தி நடக்கிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலங்களுக்கும் அரளிப்பூ நாற்றுகள் விற்பனைக்கு செல்கிறது. சீசன் காலத்தில் விளைச்சல் அதிகம் இருப்பதால் அதன் விலை குறைந்து, கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவே சீசன் இல்லாத நேரத்தில் விளைச்சல் குறைவால், கிலோ, 300 முதல், 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது, சீசன் துவங்கியுள்ளதால் அரளிப்பூ வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கடந்த வாரம் கிலோ, 300 முதல், 400 ரூபாய்க்கு விற்ற அரளி, தற்போது கிலோ, 20 முதல், 30 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது.