/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆட்டோ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் கேட்டு மனு
/
ஆட்டோ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் கேட்டு மனு
ADDED : அக் 07, 2025 01:25 AM
நாமக்கல் ஆட்டோ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக, 7,000 ரூபாய் வழங்கக்கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில், ஹிந்த் மஸ்துார் சபா தமிழ்நாடு எச்.எம்.எஸ்., கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் பேரவையினர் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: கட்டுமான மற்றும் அமைப்புசாரா ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிரந்தர முதலாளியோ அல்லது நிரந்தர மாத ஊதியமோ இல்லை. இவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படாததால், வறுமை கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் குடும்பங்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு உண்டு.
புதுச்சேரி, டில்லி போன்ற மாநிலங்களில், நலவாரிய உறுப்பினர்களின் குடும்பங்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், தீபாவளி போனஸ் வழங்கி வருகின்றனர். இதேபோல், தமிழகத்தில் உள்ள கட்டுமான மற்றும் அமைப்புசாரா ஆட்டோ நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், 7,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.