/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் அரசு பள்ளி மாணவருக்கு 2ம் பருவ பாட புத்தகம் வழங்கல்
/
நாமக்கல் அரசு பள்ளி மாணவருக்கு 2ம் பருவ பாட புத்தகம் வழங்கல்
நாமக்கல் அரசு பள்ளி மாணவருக்கு 2ம் பருவ பாட புத்தகம் வழங்கல்
நாமக்கல் அரசு பள்ளி மாணவருக்கு 2ம் பருவ பாட புத்தகம் வழங்கல்
ADDED : அக் 07, 2025 01:24 AM
நாமக்கல், தமிழகம் முழுவதும், கடந்த செப்., 27 முதல் நேற்று வரை, 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து, நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவியருக்கு, இரண்டாம் பருவ பாட புத்தகம் வழங்குவதற்காக ஏற்கனவே, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. நேற்று பள்ளிகள் தொடங்கியதும், மாணவ, மாணவியருக்கு, இரண்டாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்பட்டன.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த நிலையில், மாணவர்களுக்கு, 2ம் பருவ பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். சி.இ.ஓ., மகேஸ்வரி முன்னிலை வகித்தார். நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, மாணவர்களுக்கு, 2ம் பருவ பாட புத்தங்களை வழங்கி பேசினார். தலைமையாசிரியர் சீனிவாச ராகவன், உதவி தலைமையாசிரியர்கள் ராமு, உமா மாதேஸ்வரி, பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.