/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்லுாரியில் சமூக நீதி விடுதி கான்பரன்சில் முதல்வர் திறப்பு
/
கல்லுாரியில் சமூக நீதி விடுதி கான்பரன்சில் முதல்வர் திறப்பு
கல்லுாரியில் சமூக நீதி விடுதி கான்பரன்சில் முதல்வர் திறப்பு
கல்லுாரியில் சமூக நீதி விடுதி கான்பரன்சில் முதல்வர் திறப்பு
ADDED : அக் 07, 2025 01:24 AM
நாமக்கல், தமிழக அரசின் தாட்கோ மூலம், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், 150 மாணவர்கள் தங்கும் வகையில், சமூக நீதி மாணவர் விடுதி, 7 கோடியே, 62 லட்சத்து, 49,000 ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்த விடுதி கட்டடத்தில், கழிவறை, குளியலறையுடன் கூடிய மாணவர்கள் தங்கும் அறைகள், தரை தளத்தில், 5 அறை, முதல் தளத்தில், 9 அறை, இரண்டாம் தளத்தில், 9 அறை, மூன்றாம் தளத்தில், இரண்டு 2 அறை அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள சமூக நீதி விடுதி கட்டடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, விடுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், குத்துவிளக்கேற்றி, விடுதியை மாணவர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.