/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜல்லி பெயர்ந்த நைனாமலை சாலை:வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
/
ஜல்லி பெயர்ந்த நைனாமலை சாலை:வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
ஜல்லி பெயர்ந்த நைனாமலை சாலை:வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
ஜல்லி பெயர்ந்த நைனாமலை சாலை:வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
ADDED : செப் 29, 2025 01:56 AM
ராசிபுரம்:நாமக்கல் மாவட்டத்தில் மலை மேல் உள்ள பெருமாள் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நைனாமலை கோவில். இக்கோவிலில் மற்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடந்தாலும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மட்டுமின்றி சேலம், ஈரோடு, திருச்சி, கரூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் அதிகம் பேர் வருகின்றனர்.
இதனால், நைனாமலைக்கு தற்போது நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.ராசிபுரம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, கல்குறிச்சி, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் காளப்பநாயக்கன்பட்டி அடுத்த துத்திக்குளம், ராசாகவுண்டன் புதுார் வழியாக நைனாமலைக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், துத்திக்குளத்தில் இருந்து ராசாகவுண்டன்புதுார் வழியாக நைனாமலை செல்லும் சாலை மிகவும் மோசமாக மாறிவிட்டது. ஆங்காங்கே குழிகளாகவும் ஜல்லிகற்களாகவும் உள்ளன. இதனால், டூவீலரில் செல்வோர், காரில் வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த, ஐந்தாண்டுகளுக்கு மேலாக இந்த சாலை இதே நிலையில்தான் உள்ளது. இந்த சாலையில் தினமும் விவசாயிகளும், பள்ளி, கல்லுாரி மாணவர்களும் செல்கின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.