/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் விண்ணப்பம் வரவேற்பு: அதிகாரி
/
நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் விண்ணப்பம் வரவேற்பு: அதிகாரி
நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் விண்ணப்பம் வரவேற்பு: அதிகாரி
நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் விண்ணப்பம் வரவேற்பு: அதிகாரி
ADDED : ஆக 11, 2011 11:58 PM
நாமக்கல்: 'ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டம் செயல்படுத்த, அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, வேளாண் இணை இயக்குனர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம், 2 முதல், 6 தொகுதிகள் நாமகிரிப்பேட்டை, மோகனூர், எருமப்பட்டி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டங்கள் தொடர்பாக, ஊரக மக்கள் பங்கேற்புடன் கூடிய பகுப்பாய்வு முகாம், திட்ட விழிப்புணர்வு முகாம் நடத்திட, தகுதி வாய்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு, மத்திய அரசின் நீர்வடிப்பகுதி வழிகாட்டி வழிமுறைகள், 2008ன்படி தொகை வழங்கப்படும். எனவே, மேற்காணும் நீர்வடிப்பகுதி பணிகளில் முன் அனுபமுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியுள்ள நிறுவனங்கள், 'திட்ட அலுவலர், வேளாண் இணை இயக்குனர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, என், 563 சேலம் ரோடு, நாமக்கல் 1' என்ற முகவரிக்கு வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.