/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இருவேறு சாலை விபத்து: மூன்று பேர் பரிதாப பலி
/
இருவேறு சாலை விபத்து: மூன்று பேர் பரிதாப பலி
ADDED : செப் 17, 2011 01:24 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், அடுத்தடுத்து நடந்த இருவேறு சாலை
விபத்தில், மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர். சம்பவம் குறித்து டவுன்
போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.திருச்செங்கோடு அடுத்த
கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் முத்துரெட்டி (22), சுரேஷ் (21).
இருவரும், ஹீரோ ஹோண்டா ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக்கில், நேற்று காலை 10
மணிக்கு, திருச்செங்கோடு வந்து கொண்டிருந்தனர். முத்துரெட்டி பைக்கை ஓட்டி
வந்தார். அப்போது, தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு,
கர்நாடகாவுக்கு சென்று கொண்டிருந்த டாரஸ் லாரியை ஓவர் டேக்
செய்தனர்.அப்போது எதிரே வந்த சிறுமொளசியை சேர்ந்த மனோஜ் பிரபாகர் (25)
என்பவர் மோட்டார் பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில், முத்துரெட்டியும், சுரேஷூம் லாரி அடியில் சிக்கி, உடல் நசுங்கி
சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மனோஜ் பிரபாகர்
படுகாயமடைந்தார்.சம்பவம் குறித்து, திருச்செங்கோடு டவுன் போலீஸார் வழக்கு
பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், திருச்செங்கோடு அடுத்த
ஐந்துபனையை சேர்ந்தவர் ராஜம்மாள் (65), அவரது மகள் பூமதி (45). இருவரும்,
நேற்று காலை 10 மணியளவில், டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸல் வண்டியில்,
திருச்செங்கோடு வந்து கொண்டிருந்தனர். வரப்பாளையம் அருகே வந்தபோது, எதிரே
வந்த கே.ஏ.எஸ்., என்ற தனியார் பஸ், எதிர்பாராதவிதமாக மொபெட் மீது மோதி
விபத்துக்குள்ளானது.விபத்தில் படுகாயமடைந்த தாய், மகள் இருவரையும், அருகில்
இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். ஆனால், வரும் வழியிலேயே பூமதி இறந்தார். சம்பவம் குறித்து
திருச்செங்கோடு டவுன் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.