ADDED : செப் 17, 2011 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனூர்: மோகனூர் ஒன்றிய மற்றும் நகர தி.மு.க., சார்பில், முன்னாள்
முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா, மோகனூரில் நடந்தது.ஒன்றியச் செயலாளர்
வக்கீல் கைலாசம் தலைமை வகித்தார்.
நகரச் செயலாளர் அர்ஜூனன், முன்னாள்
டவுன் பஞ்சாயத்து சேர்மன் உடையவர், யூனியன் கவுன்சிலர் ராமசாமி, முன்னாள்
யூனியன் துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை
முன்னிட்டு, நகரில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தப்பட்டது. கட்சி நிர்வாகிகள் பாபு, வரதராஜன், ராமலிங்கம், சந்திரன்,
தங்கராஜூ உட்பட பலர் பங்கேற்றனர்.