/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம்
/
நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம்
நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம்
நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம்
ADDED : நவ 22, 2024 06:36 AM
நாமக்கல்: குளிர் காலம் துவங்கியதையடுத்து, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நேற்று, 110 கிலோவில் வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்ச நேயர் கோவில் உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருடபிறப்புகள், தமிழ் மாத முதல் ஞயிற்றுக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் செய்யப்படும். அதேபோல் குளிர்காலம் துவங்கியதும், சுவாமிக்கு சிறப்பு வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்படும். அந்த வகையில் நேற்று சுவாமிக்கு, 110 கிலோ எடையளவில் சிறப்பு வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இது நடப்பாண்டின் முதல் வெண்ணைக்காப்பு அலங்காரம். பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
குளிர்காலம் முழுவதும், அடிக்கடி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாலை நேரத்தில் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஆதிபாரசக்தி செவ்வாடை பக்தர்கள், கோவில் அலுவலக தொலைபேசி எண்ணை 04286 233999 தொடர்பு கொண்டு வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்வதை உறுதிப்படுத்திக்கொண்டால், பல மணி நேரம் கால விரயத்தை தவிர்க்கலாம்.