/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
85,426 குழந்தைகளுக்கு 'ஏ' திரவம் நாமக்கல் கலெக்டர் தகவல்
/
85,426 குழந்தைகளுக்கு 'ஏ' திரவம் நாமக்கல் கலெக்டர் தகவல்
85,426 குழந்தைகளுக்கு 'ஏ' திரவம் நாமக்கல் கலெக்டர் தகவல்
85,426 குழந்தைகளுக்கு 'ஏ' திரவம் நாமக்கல் கலெக்டர் தகவல்
ADDED : அக் 29, 2025 01:29 AM
நாமக்கல், 'நாமக்கல் மாவட்டத்தில், 85,426 குழந்தைகளுக்கு வைட்டமின், 'ஏ' திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தேசிய அளவில், 6 மாதம் முதல், 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும், வைட்டமின், 'ஏ' குறைபாடு தடுப்பு முகாம், நேற்று துவங்கி வரும், 31 வரை நடக்கிறது. வைட்டமின், 'ஏ' கண் விழித்திரைக்கு தேவைப்படும் முக்கிய உயிர்ச்சத்து. தினமும் உணவில் தேவையான அளவு வைட்டமின், 'ஏ' அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
வைட்டமின், 'ஏ' குறைபாடால் மாலைக்கண் நோய், உலர்ந்த கண் கீழ் இமை படலம், பிட்டாப் புள்ளிகள், உலர்ந்த விழித்திரை, கண்பார்வை இழப்பு மற்றும் வளர்ச்சி குறைபாடு, சுவாசக்குழாய் நோய்த்தொற்று, ஜீரண மண்டல நோய்த்தொற்று, தட்டம்மை, மலட்டுத்தன்மை, தோல் பிரச்னைகள் ஏற்படும்.
பார்வையிழப்பை தடுக்க, ஆண்டுதோறும், இரண்டு முறை வைட்டமின், 'ஏ' திரவம் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், தற்போது நடக்கும் முகாமில், 85,426 குழந்தைகளுக்கு, வைட்டமின், 'ஏ' திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு வழங்கும் வைட்டமின், 'ஏ' திரவம் தரமானது, பாதுகாப்பானது.
மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், குறிப்பாக தங்கள் வீடுகளில் உள்ள, 6 மாதம் முதல், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படும் வைட்டமின், 'ஏ' திரவம் வழங்கும் முகாமில் திரவம் வழங்கி, பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

