/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மா.ம.கூ., வங்கிக்கு ரூ.3,5௦௦ கோடியில் வணிகம்
/
நாமக்கல் மா.ம.கூ., வங்கிக்கு ரூ.3,5௦௦ கோடியில் வணிகம்
நாமக்கல் மா.ம.கூ., வங்கிக்கு ரூ.3,5௦௦ கோடியில் வணிகம்
நாமக்கல் மா.ம.கூ., வங்கிக்கு ரூ.3,5௦௦ கோடியில் வணிகம்
ADDED : ஆக 15, 2025 02:38 AM
நாமக்கல், நாமக்கல்லில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை, சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து டிபாசிட்கள் மற்றும் கடன்கள் உள்ளிட்ட, 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான வணிகம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எளிதில் பணம் பெறும் வகையில், ஏ.டி.எம்., மிஷின்கள் மற்றும் மொபைல் ஏ.டி.எம்.,கள் நிறுவப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியை, வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினார். பின்னர் அவர், கூட்டுறவு கொடியேற்றி வைத்து, வங்கி மூலம் கடன் உதவிகளை வழங்கி பேசினார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், கலெக்டர் துர்காமூர்த்தி, எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, வங்கி மேலாண் இயக்குனர் சந்தானம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.