/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கடைகளுக்கு விடுமுறைஉணவு கிடைக்காமல் அவதி
/
கடைகளுக்கு விடுமுறைஉணவு கிடைக்காமல் அவதி
ADDED : ஆக 04, 2011 02:16 AM
ஈரோடு: ஈரோட்டில் நேற்று பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், உணவு கிடைக்காமல் இளைஞர்கள் அவதிப்பட்டனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நிர்வாகம் நேற்று உள்ளூர் விடுமுறை
அறிவித்தது. தனியார் நிறுவனங்களும் நேற்று விடுமுறை அளித்தன. இதனால்,
பிரப்ரோடு, காந்திஜி ரோடு, நேதாஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு, மேட்டூர் ரோடு,
வீரப்பன் சத்திரம், பஸ் ஸ்டாண்டு பகுதி உள்பட மாநகரின் பல்வேறு
பகுதியிலுள்ள சிறிய ஹோட்டல்கள், டீக்கடைகளும் விடுமுறை விடப்பட்டன.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாநகர சாலைகள் போக்குவரத்து குறைந்து
அமைதியாக காணப்பட்டது.
அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில், வெளியூரிலிருந்து ஈரோட்டில்
தங்கி பல்வேறு இடங்களில் பணிபுரியும் இளைஞர்கள், மதிய உணவு உண்ண இடமின்றி
அவதிப்பட்டனர்.வெளியூரிலிருந்து ஈரோடு வந்து தொழில் செய்யும் சிலர்
மட்டும், ஓரிரு இடங்களில், ஹோட்டல், டீக்கடையை திறந்து வைத்திருந்தனர்.
அங்கு கலவை சாதம் மட்டும் விற்பனை செய்யப்பட்டன; அதுவும் சில நிமிடங்களில்
விற்றுத் தீர்ந்தது.

