/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சங்கிலி கருப்பண்ணன், பொன்னாட்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
சங்கிலி கருப்பண்ணன், பொன்னாட்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சங்கிலி கருப்பண்ணன், பொன்னாட்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சங்கிலி கருப்பண்ணன், பொன்னாட்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 12, 2011 03:48 AM
ப.வேலூர்: சங்கிலி கருப்பண்ணன், பொன்னாட்சி அம்மன் கோவிலில் நடந்த
கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று
ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.ப.வேலூர் அடுத்த நன்செய் இடையாறில், சங்கிலி
கருப்பண்ணன், விநாயகர், பொன்னாட்சி அம்மன் கோவில் திருப்பணி மிகுந்த
பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி அனைத்தும் முடிவடைந்ததை
தொடர்ந்து, கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.
விழாவை முன்னிட்டு, கடந்த 9ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி வழிபாட்டுடன்
நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம்
எடுத்து வருதல், புண்யாகவாசம், கும்ப அலங்காரம், தமிழ்மறை மற்றும்
வேதபாராயணம், விசேஷ சாந்தி, தீபாராதனை, யாக வேள்வி பூஜை உள்ளிட்ட பல்வேறு
பூஜைகள் நடந்தது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, மகா கணபதி பூஜை, நான்காம்
காலயாக வேள்வி, நாடி சந்தானம், மூலமந்திரம், வேதமந்திரம், கடம் புறப்பாடு
நிகழ்ச்சி நடந்தது. காலை 8 மணிக்கு கும்பங்கள் மூலாலயத்துக்கு எழுந்தருளல்,
காலை 9 மணிக்கு விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து
விநாயகர், சங்கிலி கருப்பண்ண ஸ்வாமி மற்றும் பரிவார மூல மூர்த்திகளுக்கு
மகா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, ஸ்வாமி தரிசனம், மகா தீபாராதனை,
பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பங்கேற்ற
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சுற்று
வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச்
சென்றனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.