/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செவிலியர் உதவியாளர் காலி பணியிடம் அறிவிப்பு
/
செவிலியர் உதவியாளர் காலி பணியிடம் அறிவிப்பு
ADDED : செப் 14, 2011 01:16 AM
நாமக்கல்: 'இரண்டாம் நிலை செவிலியர் உதவியாளர் காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளன' என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் இணை இயக்குனர், இரண்டாம் நிலை செவிலியர் உதவியாளர் காலிப்பணிடம் இருப்பதாக அறிவித்துள்ளார்.
அந்த பணியிடத்தக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஒரு ஆண்டு நர்சிங் அசிஸ்டண்ட் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.மேலும், மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அந்நபர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை உள்ளிட்ட அசல் சான்றுகளுடன், வரும் 19ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும். இப்பணியிடத்துக்கு, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 35 வயதும், பி.சி., எம்.பி.சி., பிரிவினருக்கு 32 மற்றும் மற்ற பிரிவினருக்கு 30 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.