/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரெங்கேஸ்வரர் கல்வியியல்கல்லூரியில் பட்டமளிப்பு
/
ரெங்கேஸ்வரர் கல்வியியல்கல்லூரியில் பட்டமளிப்பு
ADDED : செப் 19, 2011 12:56 AM
நாமக்கல்: நாமக்கல், பொட்டிரெட்டிப்பட்டி ரெங்கேஸ்வரர் கல்வியியல்
கல்லூரியில், முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவுக்கு, கல்லூரி
தலைவர் ரெங்கசாமி தலைமை வகித்தார்.
அறக்கட்டளை உறுப்பினர் சண்முகசுந்தரம்
வரவேற்றார். கல்லூரி முதல்வர் சிவக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். சிவானி
தொழில்நுட்பக் கல்லூரி செயலாளர் விக்னேஸ்வர், ஜெ.ஜெ., கல்லூரி நிதி அலுவலர்
கனகசபை, கல்லூரி முதல்வர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காவேரி
மகளிர் கல்லூரி முதல்வர் சுஜாதா, மாணவ, மாணவியருக்கு பட்டச்சான்று வழங்கி
பேசினார். நிகழ்ச்சியில், கல்லூரி இணைச்செயலாளர் சசிகுமார், பாலிடெக்னிக்
கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.