ADDED : செப் 22, 2011 02:27 AM
நாமக்கல்:திருச்செங்கோட்டில் 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள
சான்று பெற்ற விதைப்பண்ணையை, விதைப்பண்ணை இயக்குனர் நேரில் பார்வையிட்டு
ஆய்வு செய்தார்.நாமக்கல் மாவட்டத்தில், எண்ணெய் வித்து பயிர்களில் தரமான
சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு, 221 ஹெக்டேர் பரப்பில்
விதைப்பண்ணை அமைக்கப்பட்டு விட்டது.திருச்செங்கோடு வட்டாரத்தில் உள்ள
முத்தினம்பாளையம் கிராமத்தில் சுப்ரமணி என்பவரது தோட்டத்தில், சான்று பெற்ற
விதைப் பண்ணை, 1.5 ஏக்கர் பரப்பில் திருச்செங்கோடு வேளாண் உதவி இயக்குனர்
மூலம் அமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதை விதைப்பண்ணை இயக்குனர்
பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது, எண்ணெய் வித்து பயிர்களில் தன்னிறைவு
பெற உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும்.
அதற்கு தரமான சான்று பெற்று
விதைகளை உற்பத்தி செய்து விசாயிகளுக்கு வழங்கி புதிய நவீன தொழில்நுட்பங்களை
கடைபிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும். விதை உற்பத்தியில விதைச்சான்று
நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.விதைச்சான்று
இயக்குனர் சுப்ரமணியம், அலுவலர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.