/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் ரைடர்ஸ் கிளப் ஆண்டுவிழா கொண்டாட்டம்
/
நாமக்கல் ரைடர்ஸ் கிளப் ஆண்டுவிழா கொண்டாட்டம்
ADDED : மார் 24, 2025 06:32 AM
ராசிபுரம்: நாமக்கல் ரைடர்ஸ் கிளப்பில், 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த, இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சைக்கிள் ஓட்டி வருகின்றனர். நாமக்கல்லில் இருந்து ஈரோடு, கோவை, கரூர், கொல்லிமலை, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சைக்கிள் ஓட்டி வருகின்றனர். கடந்த, இரண்டு ஆண்டுகளில் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரு லட்சம் கி.மீ., துாரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளனர். இவர்களது, இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் கொண்டாடினர்.
நாமக்கல் ரைடர்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், நல்லமுத்து, ஜெகதீசன் ஆகியோர், 2025ம் ஆண்டு இந்தியன் சைக்கிளிஸ்ட் டைட்டில் வின்னர் பட்டம் பெற்றுள்ளனர். மூன்று பேறும் தலா, 2,200 கிலோ மீட்டர் ஓட்டி இந்த பட்டத்தை பெற்றனர். இதற்கான பாராட்டு விழாவும் நேற்று நடந்தது. டாக்டர் ராஜா இதற்கான மெடல்களை வழங்கி பாராட்டினார்.