/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளஸ் 1 தேர்வில் நாமக்கல் 92.46 சதவீதம் தேர்ச்சி
/
பிளஸ் 1 தேர்வில் நாமக்கல் 92.46 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 01:36 AM
நாமக்கல், பிளஸ் 1 தேர்வில், நாமக்கல் மாவட்டம், 92.46 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 19ம் இடம் பிடித்தது.
தமிழகத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வு, மார்ச், 5ல் தொடங்கி, 27ல் முடிந்தது. அதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில், 197 பள்ளிகளை சேர்ந்த, 9,226 மாணவர், 9,489 மாணவியர் என, மொத்தம், 18,715 பேர் எழுதினர். இதில், 8,326 மாணவர், 8,978 மாணவியர் என, மொத்தம், 17,304 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள், 90.25, மாணவியர் 94.61 தேர்ச்சி பெற்றனர்.
இது, சராசரி, 92.46 தேர்ச்சி. அதேபோல், மாவட்டத்தில், 89 அரசு பள்ளிகளை சேர்ந்த, 4,399 மாணவர், 5,039 மாணவியர் என, மொத்தம், 9,438 பேர் தேர்வு எழுதினர். அவர்களில், 3,662 மாணவர்கள், 4,612 மாணவியர் என, மொத்தம், 8,274 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்த தேர்ச்சி, 87.67. ஒரு, ஆதி திராவிட நலப்பள்ளியை சேர்ந்த, மொத்தம், 86 பேர் தேர்வு எழுதியதில், 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி. 91.86 சதவீதம். மேலும், ஐந்து பழங்குடியினர் நலப்பள்ளிகளை சேர்ந்த, 307 மாணவ, மாணவியர் எழுதியதில், 298 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 97.07 தேர்ச்சி. மாவட்டத்தில், ஏழு அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த, 548 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 90.33 சதவீதம்.
இந்தாண்டு, 43 பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அவற்றில், ஆறு அரசு பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு பிளஸ் 1 தேர்வில், நாமக்கல் மாவட்டம், மாநில அளவில், 19ம் இடம் பிடித்துள்ளது. 2024ல், 14ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.