/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரிக்கு சாம்பியன் பட்டம்
/
நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரிக்கு சாம்பியன் பட்டம்
நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரிக்கு சாம்பியன் பட்டம்
நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரிக்கு சாம்பியன் பட்டம்
ADDED : அக் 18, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், அண்ணா பல்கலைக்கழக மண்டல தடகள போட்டி, நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது.இதில், 17 கல்லுாரிகளில் இருந்து, 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி அணி ஆண்கள் பிரிவில், 183 புள்ளிகளுடனும், பெண்கள் பிரிவில், 177 புள்ளிகளுடனும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை கல்லுாரி தாளாளர் பாபு, செயலாளர் முனைவர் கவித்ரா நந்தினி, செயல் இயக்குனர் கார்த்திக், முதல்வர் முனைவர் ராமபாலன், உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.