/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதிகளில் தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்
/
நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதிகளில் தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்
நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதிகளில் தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்
நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதிகளில் தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்
ADDED : நவ 07, 2024 01:29 AM
நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதிகளில்
தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்
நாமக்கல், நவ. 7-
'நாமக்கல், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிகளில், தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது' என, மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், தலைமை கழக தேர்தல் தொகுதி பார்வையாளர்கள் முன்னிலையில், பாக முகவர்கள் (பி.எல்.ஏ.2) ஆலோசனை கூட்டமும், சரிபார்க்கும் பணியும் நடக்கிறது.
இன்று, நாமக்கல் கிழக்கு நகரத்தில், காலை, 10:00 மணிக்கு, சின்னமுதலைப்பட்டி மண்டபத்திலும், 11:00 மணிக்கு, ஆர்.பி.புதுார், மதியம், 12:00 மணிக்கு, கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தெரு, மாலை, 5:00 மணிக்கு, நகராட்சி திருமண மண்டபம், 6:00 மணிக்கு, கொசவம்பட்டியில் உள்ள அவைத்தலைவர் வெங்கடாசலம் வீட்டிலும் கூட்டம் நடக்கிறது. சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டி ஒன்றியத்தில், இன்று காலை, 8:00 மணிக்கு, பவித்திரம் பஞ்., பி.வி.ஆர்., திருமண மண்டபம், 8:30 மணிக்கு, பவித்திரம்புதுார் பஞ்., தகவல் மையம், 9:00 மணிக்கு, வரகூர் பஞ்., ரெட்டியார் திருமண மண்டபம், 9:30 மணிக்கு, தேவராயபுரம் பஞ்., குமார் இல்லம், 10:00 மணிக்கு, முட்டாஞ்செட்டி பஞ்., ராஜலிங்கம் இல்லம், 10:30 மணிக்கு வரதராஜபுரம் பஞ்., பெரியசாமி இல்லம்.
மாலை, 4:00 மணிக்கு, எம்.மேட்டுப்பட்டி பஞ்., ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில் வீடு, 4:30 மணிக்கு, கோணங்கிப்பட்டி பஞ்., பழனிவேல் மில், 5:30 மணிக்கு, காவக்காரன்பட்டி பஞ்., மேலமேடு மீனாட்சி மஹால், 6:00 மணிக்கு, வடவத்துார் பஞ்., ரஞ்சித் தோட்டத்து வீடு, 6:30 மணிக்கு, வாழவந்தி பஞ்., சமுதாய கூடம், இரவு, 7:30 மணிக்கு, செவிந்திப்பட்டி பஞ்., அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.