/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பெயர் பலகையில் எழுத்துகள் மாயம்
/
நாமக்கல் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பெயர் பலகையில் எழுத்துகள் மாயம்
நாமக்கல் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பெயர் பலகையில் எழுத்துகள் மாயம்
நாமக்கல் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பெயர் பலகையில் எழுத்துகள் மாயம்
ADDED : ஜூன் 05, 2025 01:25 AM
நாமக்கல், நாமக்கல்-திருச்சி சாலையில் போலீஸ் கேண்டின், போக்குவரத்து போலீஸ் அலுவலகம், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. அதேபோல் துறையூர் சாலையில் போலீஸ் ஸ்டேஷன், குற்றப்பிரிவு, ஊர்காவல் படை அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இந்த போலீஸ் ஸ்டேஷன்களில், தினமும் பல்வேறு வழக்குகளுக்காக ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மகளிர் போலீஸ் ஸ்டேஷனின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையின் எழுத்துக்கள் முற்றிலும் அழிந்து வெறும் பலகை மட்டுமே உள்ளது. இதனால் புகாரளிக்க வரும் மக்கள், துறையூர் சாலையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கின்றனர். அங்குள்ள போலீசாரின் அறிவுறுத்தலால் மீண்டும் மகளிர் போலீஸ் ஸ்டேஷனை தேடி வருகின்றனர். எனவே பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனின் பெயர் பலகையை புதுப்பிக்க வேண்டும்.