sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இன்று முதல் செயல்படுகிறது நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் 45 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

/

இன்று முதல் செயல்படுகிறது நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் 45 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

இன்று முதல் செயல்படுகிறது நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் 45 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

இன்று முதல் செயல்படுகிறது நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் 45 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு


ADDED : நவ 10, 2024 01:27 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று முதல் செயல்படுகிறது நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட்

45 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

நாமக்கல், நவ. 10-

நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பிற்காக, 45 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.

நாமக்கல் நகரில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சாலையை கடந்த செல்லும் வாகன ஓட்டிகள், நெரிசலில் சிக்கி விழி பிதுங்குகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காக, முதலைப்பட்டியில் உள்ள, ஹிந்து சமய அறநிலைய துறையினருக்கு சொந்தமான, 12.90 ஏக்கர் நிலத்தில், புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான தொகையும், நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில், தேர்வு செய்யப்பட்ட இடத்தில், 19.50 கோடி ரூபாய் மதிப்பில், 2022 அக்., 20ல், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்த, 22ல் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். நாமக்கல் மாநகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில், 51 பஸ்கள் நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 57 கடைகள், இரண்டு ஓட்டல்கள், மூன்று பயணிகள் காத்திருப்பு அறை, டிரைவர், கண்டக்டர் அறை, பாலுாட்டும் தாய்மார்கள் அறை, பொருட்கள் வைப்பு அறை, டூவீலர், கார் பார்க்கிங், ஏ.டி.எம்., மையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீசார் பதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல், பஸ் ஸ்டாண்டின் நுழைவு வாயில் மற்றும் உட்புற பகுதிகளில், 45 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பஸ் ஸ்டாண்ட் இன்று முதல் செயல்பட துவங்குகிறது.

எந்த வழியாக...

திருச்சி, துறையூர், சேந்தமங்கலம், மோகனுார் பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள், நாமக்கல் - பரமத்தி சாலை, அண்ணாதுரை சிலை அருகே பயணிகளை இறக்கிவிட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். மதுரை, கோவை, ஈரோடு போன்ற ஊர்களில் இருந்து வரும் பஸ்கள், நாமக்கல் நகருக்குள் வராமல், வள்ளிபுரம், நல்லிப்பாளையம் சர்வீஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். நாமக்கல்லில் இருந்து ராசிபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும், புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாலை முதல்...

நாமக்கல் கலெக்டர் உமா கூறுகையில், ''நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில், இன்று அதிகாலை, 4:30 மணி முதல் அனைத்து பஸ்களும், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி இயக்க வேண்டும். பஸ்களின் நேர விபர அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அனைத்து புறநகர் பஸ்களும், புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்வதை, போக்குவரத்து அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் வசதிக்காக அனைத்து கடைகள், உணவகங்கள் முழுமையாக இயங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது, உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us