/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய கராத்தே போட்டி மாணவருக்கு 'வெண்கலம்'
/
தேசிய கராத்தே போட்டி மாணவருக்கு 'வெண்கலம்'
ADDED : டிச 10, 2025 10:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: டில்லியில் நடந்த தேசிய கராத்தே சாம்பி-யன்ஷிப் போட்டியில், குமாரபாளையம் மாணவர் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
டில்லியில், நான்காவது தேசிய கராத்தே சாம்பி-யன்ஷிப் போட்டி நடந்தது. எட்டு வயதுக்கு உட்-பட்ட, 30 கிலோ எடை பிரிவில், குமித்தே போட்-டியில் சப் ஜூனியர் பிரிவில், குமாரபாளை-யத்தை சேர்ந்த, 8 வயது கராத்தே வீரர் இன்பா வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். இப்போட்டியில், இந்தியாவின் நான்கு மண்ட-லங்களில் இருந்து, பல நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
இவரது பயிற்சியாள-ரான ஷேடோ காய் கராத்தே அமைப்பின் ஷிகன்ஷா கவுதம் உள்பட பலர், இவரது சாத-னையை பாராட்டினர்.

