/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.29.43 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
/
ரூ.29.43 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ADDED : டிச 10, 2025 10:23 AM

நாமக்கல்: நாமக்கல் தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், செவ்வாய் தோறும் பருத்தி ஏலம் நடந்து வருகிறது. அதன்-படி, நேற்று நாமக்கல் மாவட்டம், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகள், 38,860 கிலோ பருத்தியை விற்ப-னைக்கு கொண்டு வந்தனர்.
அதில், ஆர்.சி.எச்., ரக பருத்தி, 100 கிலோ, 7,399 ரூபாய் முதல், 7,777 ரூபாய்; கொட்டு மட்ட ரகம், 4,045 ரூபாய் முதல், 4,555 ரூபாய் என, 28 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், திருச்-செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டு-றவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்தில், 2,152 கிலோ பருத்தி வரத்தானது. இதில், பி.டி., ரகம், 7,319 ரூபாய் முதல், 7,839 ரூபாய் என, மொத்தம், 1.43 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.

