/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய அளவிலான பேஸ்பால் போட்டி அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு
/
தேசிய அளவிலான பேஸ்பால் போட்டி அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு
தேசிய அளவிலான பேஸ்பால் போட்டி அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு
தேசிய அளவிலான பேஸ்பால் போட்டி அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு
ADDED : டிச 18, 2024 01:36 AM
மோகனுார், டிச. 18-
தேசிய அளவிலான பேஸ் பால் போட்டிக்கு, அணியாபுரம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அணிக்காக பேஸ் பால் தேர்வு போட்டி, மாநில அளவில் திருச்சியில் நடந்தது. அதில், மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டியில், நாமக்கல் மாவட்டம், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்தனர்.
அதில், 14 வயது பிரிவில், அக் ஷயா, பிரியதர்ஷினி,- பவஸ்ரீ, கிஷோர், திக்ஷன் ஆகியோர், சட்டீஸ்கர் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், சரவணா, நனிஷ்கா, கனிஷ்கா ஆகியோர் டில்லியில் நடக்கும் போட்டிக்கும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ஆனந்த், தேன்மொழி, சுகுணா ஆகியோர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேசிய அளவிலான பேஸ் பால் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியரை, பள்ளி தலைமையாசிரியர் புனிதா, உடற்கல்வி ஆசிரியர்கள் பெரியசாமி, செல்வராஜ் ஆகியோர் பாராட்டினர்.