/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய இயற்கை மருத்துவ தினம் விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி
/
தேசிய இயற்கை மருத்துவ தினம் விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி
தேசிய இயற்கை மருத்துவ தினம் விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி
தேசிய இயற்கை மருத்துவ தினம் விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி
ADDED : நவ 19, 2024 01:34 AM
நாமக்கல், நவ. 19-
தேசிய இயற்கை மருத்துவ தினத்தையொட்டி, நாமக்கல் -- மோகனுார் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி நடந்தது. அரசு இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை டாக்டர் செந்தில்குமார், சித்தா டாக்டர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணி, மோகனுார் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் வீதி வழியாக சென்று, மீண்டும் பழைய மருத்துவமனையை அடைந்தது. இதேபோல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், விழிப்புணர்வு மனித சங்கிலி
நடந்தது.
முதல்வர் சாந்தா அருள்மொழி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் குணசேகரன், கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை இயக்குனர் மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.