/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு மகளிர் கல்லுாரியில் தேசிய ஊட்டச்சத்து வார விழா
/
அரசு மகளிர் கல்லுாரியில் தேசிய ஊட்டச்சத்து வார விழா
அரசு மகளிர் கல்லுாரியில் தேசிய ஊட்டச்சத்து வார விழா
அரசு மகளிர் கல்லுாரியில் தேசிய ஊட்டச்சத்து வார விழா
ADDED : செப் 17, 2025 01:48 AM
நாமக்கல், :நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் மாதவி தலைமை வகித்தார். ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறைத்தலைவர் சுஜாதா வரவேற்றார்.
விழாவில், கல்லுாரி மாணவியர், டயாபட்டிஸ், கார்டியோ வாஷ்குளர் டிஸ்ஆர்டர், புரோட்டின் மற்றும் இரும்பு சத்துக்களின் முக்கியத்துவம், அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்துமிக்க திண்பண்டங்களாக துரித வகை உணவுகளான மோமோஸ், நுாடுல்ஸ், பர்கர், பப்ரவுனிஸ் போன்றவற்றை பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களைப் பயன்படுத்தி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தயாரித்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
விழாவை முன்னிட்டு, கல்லுாரிகளுக்கு இடையேயான, டிரஷர் ஹண்ட், லோகோ வரைதல், நியூட்ரி க்ராப்ட்ஸ், மைம்ஷோ மற்றும் உணவு காட்சிப்படுத்துதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லுாரி, நாமக்கல் டிரினிட்டி மகளிர் கல்லுாரி உள்பட பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.