/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீரஜ்லால் காந்தி தொல்நுட்பக் கல்லுாரியில் தேசிய விண்வெளி தினம் கொண்டாட்டம்

ADDED : ஆக 15, 2025 02:48 AM
சேலம், சேலம் விமான நிலையம் எதிரே உள்ள தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லுாரியில், 'தேசிய விண்வெளி தின விழா - 2025' இரு நாட்கள் கொண்டாடப்பட்டன. தொடக்க விழாவில், சிறந்த விஞ்ஞானி, எஸ்.டி.எஸ்.சி., எஸ்.ஹெச்.ஏ.ஆர்., - இஸ்ரோ, வி.ஏ.எல்.எப்., துணை இயக்குனர் சங்கரன், துணை மேலாளர் லோகேஷ், இஸ்ரோ - எஸ்.டி.எஸ்.சி., - எஸ்.ஹெச்.ஏ.ஆர்., குழுவினர்,
இந்திய ஸ்டீல் ஆணையத்தின், சேலம் ஸ்டீல் ஆலை நிர்வாக இயக்குனர் ஸ்ரீபிரபீர் குமார் சர்கார், ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சுந்தரம், தலைமை விருந்தினர்களாக பங்கேற்றனர்.கல்லுாரி செயலார் அர்ச்சனா, இளம் தலைமுறையினரின் கனவுகளை விண்வெளி நோக்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து முதல்வர் செல்வராஜ் பேசினார். இரு நாட்களும், மாணவர்கள், நடமாடும் விண்வெளி கண்காட்சி, விண்வெளி அறிவியல் சிறப்பு சொற்பொழிவு, பல ஊடாடும் காட்சிகளை பார்வையிட்டனர். இதன்மூலம், சேலம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராமளான மாணவர்கள் பயனடைந்தனர். நிறைவு விழாவில், உதவி கலெக்டர் விவேக் யாதவ், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உள்பட பலர் பங்கேற்றனர்.