/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா
/
எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா
எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா
எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா
ADDED : அக் 06, 2024 03:26 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்-லுாரியில் நாட்டு நலப்பணித்திட்ட நாள் விழா அனுசரிக்கப்பட்-டது.
கல்லுாரி முதல்வர் முனைவர் விமல் நிஷாந் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆங்-கிலத்துறை பேராசிரியருமான பாலசரவணன் வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதா, அறிமுக உரை-யாற்றினார். சேலம் பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்-திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஸ் பங்கேற்று பேசு-கையில்,''மாணவர்கள் சமூக நலன் கருதி, பல்வேறு செயல்பாடு-களை மேற்கொள்வது என்பது சமூக மேம்பாட்டுக்கு உறுதுணை-யாக தங்களின் கல்வியை திறம்பட கற்பதோடு, சமூக சேவை-யையும் கருத்தில் கொண்டு மாணவர்கள் செயலாற்ற வேண்டும். வாழ்வில் வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு கல்வி பயில வேண்டும்,'' என பேசினார்.இதையடுத்து, சமூக விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பாரம்ப-ரிய கலை சார்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. எக்ஸல் வணிக-வியல் மற்றும் அறிவியல் கல்லுாரியில் இருந்து, 500க்கும் மேற்-பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நிறைவாக நாட்டு நலப்-பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறை பேராசிரிய-ருமான சரவணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை, நாட்டு நலப்ப-ணித்திட்ட அலுவலர்கள் பால சரவணன், சரவணன், அமுதா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் குழுவினர் செய்திருந்-தனர்.