ADDED : அக் 21, 2024 07:27 AM
நாமக்கல்: நாமக்கல் நகரில், 100 ஆண்டாக இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனையை திறக்க வேண்டும். நாமக்கல் நகர கழிவுநீர் சுத்திரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம். வளையப்பட்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது, கிராமப்புறங்களை நகராட்சி ஆக்குவது, கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல்லில் நடந்தது.
நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். முன்னதாக, நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் விவசாய நிலங்கள் பாதிப்படையும். அதனால் மாற்று இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனையை இடமாற்றம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

