/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாசூர் ஏரி மீன்கள் வாய்க்காலுக்கு செல்வதை தடுக்க வலை அமைப்பு
/
துாசூர் ஏரி மீன்கள் வாய்க்காலுக்கு செல்வதை தடுக்க வலை அமைப்பு
துாசூர் ஏரி மீன்கள் வாய்க்காலுக்கு செல்வதை தடுக்க வலை அமைப்பு
துாசூர் ஏரி மீன்கள் வாய்க்காலுக்கு செல்வதை தடுக்க வலை அமைப்பு
ADDED : டிச 24, 2024 01:51 AM
எருமப்பட்டி, டிச. 24-
எருமப்பட்டி யூனியன், துாசூரில், 250 ஹெக்டேர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி, சில நாட்களாக கொல்லிமலையில் பெய்த கனமழையால், பொம்மசமுத்திரம், துத்திக்குளம் ஏரிகள் நிரம்பி பழையபாளையம் ஏரிக்கு வந்தது. இந்த ஏரியும், கடந்த, 2 வாரத்திற்கு முன் நிரம்பி, துாசூர் ஏரிக்கு வந்த நிலையில், கடந்த, 14ல் துாசூர் ஏரியும் நிரம்பியது.
இதிலிருந்து வெளியேறும் உபரிநீர், வடிகால் மூலம் வெளியேறி கருவாட்டாற்றில் செல்கிறது. ஏரியில் உள்ள தண்ணீர், வடிகால் பகுதியில் அதிகளவில் வெளியேறி வருவதால், இங்கு விடப்பட்டுள்ள மீன்கள் தண்ணீரில் துள்ளிக்குதித்து வடிகால் பகுதிக்கு சென்று வாய்க்காலில் சென்று விடுகின்றன. இதை தடுக்க மீனவர்கள், ஏரியின் வடிகால் பகுதியில் மீன்பிடி வலைகளை கட்டி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.