ADDED : மே 18, 2025 05:18 AM
புதுச்சத்திரம்: ஏளுரில் இருந்து, இரண்டு புதிய வழித்தடங்களுக்கு செல்லும் அரசு பஸ்களை, எம்.பி., ராஜேஸ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதுச்சத்திரம் பஞ்., யூனியன், ஏளூரில் இருந்து, இரண்டு புதிய வழித்தடங்களில் நகர பஸ் சேவையை நீட்டிப்பு செய்து, பஸ்-களை கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், திருச்செங்கோட்டி-லிருந்து, பெரியமணலி வந்து செல்லும், தடம் எண்: டி14 என்ற நகர பஸ்சையும், ராசிபுரத்திலிருந்து, ஏளூர் தடம் எண்: 52சி நகர பஸ்சையும், புதுப்பட்டி காலனி வரை என, இரண்டு புதிய வழித்-தடங்களில் நகர பஸ் சேவையை நீட்டிப்பு செய்து பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். எம்.பி., மாதேஸ்வரன், தமி-ழக அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் செங்கோட்டு-வேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.