/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநில லாரி உரிமையாளர் சம்மேளன புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
/
மாநில லாரி உரிமையாளர் சம்மேளன புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
மாநில லாரி உரிமையாளர் சம்மேளன புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
மாநில லாரி உரிமையாளர் சம்மேளன புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
ADDED : நவ 06, 2025 01:15 AM
நாமக்கல், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழகத்தின், 2025-28-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தலைவர், செயலாளர், பொருளாளர் உள்பட, 13 பதவிகளுக்கு, கடந்த, 3ல், வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. இதில், தலைவர் பதவிக்கு, முன்னாள் தலைவர் தனராஜ் உள்பட, 13 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களை திரும்ப பெற, நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, தேர்தல் குழு தலைவர் வேலு, சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் குமாரசாமி ஆகியோர், புதிய நிர்வாகிகளை நேற்று அறிவித்தனர். அதன்படி, தலைவராக தனராஜ், துணை தலைவர்களாக திருச்சி சுப்பு, கோவை செல்வராஜ், லோகநாதன், நிஜாத் ரகுமான், ராஜேந்திரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல், செயலாளராக சாத்தையா, இணை செயலாளர்களாக ஆறுமுகம், துரைசாமி, ராஜேஸ், விவேகானந்தன், கணேசன் ஆகியோரும், பொருளாளராக நந்தகோபாலும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட தனராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ''போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் வாகன பதிவு சான்றிதழ்களை தபால் மூலம் கொடுப்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரில் வழங்க வேண்டும். லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறித்து தொடர்ந்து போராடி வருகின்றோம். அது தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவோம்,'' என்றார்.

