/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சித்தி விநாயகர் கோவில் கட்டுமான பணி துவக்கம்
/
சித்தி விநாயகர் கோவில் கட்டுமான பணி துவக்கம்
ADDED : நவ 06, 2025 01:15 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, தேவாங்கபுரம் பிரதான சாலையில் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.
கடந்த, மூன்றாண்டுகளுக்கு முன், ஆலாம்பாளையம் பகுதியில் இருந்து ஒன்பதாம்படி வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்தது.அப்போது, மேம்பால பணிக்காக, சாலைப்
பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சித்தி விநாயகர் கோவிலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது.
தற்போது மீதமுள்ள இடத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறையின், சென்னை ஆணையர் உத்தரவுப்படி, ஈரோடு இணை ஆணையர் மற்றும் நாமக்கல் உதவி ஆணையர் ஆகியோர் வழிகாட்டுதல்படி, நேற்று காலை, 9:00 மணிக்கு சித்தி விநாயகர் கோவில் கட்டுமான பணி துவக்க விழா நடந்தது. கோவில் ஆய்வாளர் வடிவுக்கரசி, செயல் அலுவலர் கிருஷ்ணராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

