/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3 மாதங்களுக்கு பின் புதிய இன்ஸ்., நியமனம்
/
3 மாதங்களுக்கு பின் புதிய இன்ஸ்., நியமனம்
ADDED : மே 22, 2025 01:47 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சர்க்கிளில் வெப்படை, மொளசி போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தான், வெப்படை, மொளசி போலீஸ் ஸ்டேஷன்களையும் கூடுதலாக கவனித்து வந்தார். பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்த ரங்கசாமி, பதவி உயர்வு பெற்று, கடந்த பிப்., முதல் வாரத்தில் மாறுதலாகி சென்றுவிட்டார். இதையடுத்து புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்
படவில்லை.
திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் தான், பள்ளிப்பாளையம், வெப்படை, மொளசி போலீஸ் ஸ்டேஷன்களை கூடுதலாக கவனித்து வந்தார். மூன்று மாதங்களுக்கு பின், சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சிவகுமார், பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நியமிக்கப்பட்டார். அவர், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.